Wednesday, 21 June 2023

கண் திருஷ்டி

 இங்கு இரண்டு விஷயங்களின் மூலம் இதை எப்படி குறைப்பது என்று சொல்கிறேன்.

1. சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது நான் படிக்கவே இல்லை என்பவர்கள் அதிக papper வாங்கி எழுதுவார்கள், அதுபோல் வெளியில் குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இல்லாதது போல் நடித்துக்கொண்டு, வீட்டில் ஒரு நல்ல உடன்படிக்கை செய்துகொண்டு இருக்கவும். இப்படி சில குடும்பங்களில் நடக்கிறது அதனாலேயே எழுதுகிறேன்.

2. Body strong - basement week என்று ஒரு வடிவேல் காமெடி உள்ளது, இதற்கு உல்டாவாக நடந்துகொள்ளுங்கள். அதாவது வெளியில் நடியுங்கள் வீட்டில் சந்தோஷமாக இருங்கள்.


என்னைப் பொறுத்தமட்டில் கண் திருஷ்டியை avoid பண்ண முடியாது. பழுத்த மரம் கல்லடி படுவது போல இது எல்லார் மீதும் விழும். தான தர்மங்கள், பகவான் சரணாகதி ஸ்தோத்திரங்கள் என்று செய்து வந்தாலும்,  மேலே கூறியவாறும் இருக்கவும். "நீங்க எப்படி இருக்கீங்க, நான் சந்தோஷமா இருக்கேன்" என்று எங்கும் சொல்லவேண்டாம், உலகம் அதை விரும்புவதில்லை. கணவன், மனைவி, அப்பா, அம்மா, மாமனார்,மாமியாரிடம் ஒரு நல்ல பொழுதில் மகிழ்ச்சியாக இருக்கும்போது இதைப்பற்றி விவாதித்து ஒரு நல்ல agreement போட்டுகொள்ளவும். நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீங்களும் அழுகிற மாதிரி அழுங்கள் என்று. வாழ்க வளமுடன்.

No comments:

Post a Comment

Wedding(pre)

 இன்னும் 4 நாளில் ( செப் 3 2023) கல்யாணம். உறவுகளை திருப்தி பண்ண முடியவில்லை. ஒரு நல்ல மனிதர் குடோன் தெருவிற்கு புடவை வேஷ்டி வாங்க கூப்பிட்ட...