Wednesday 30 August 2023

Wedding(pre)

 இன்னும் 4 நாளில் ( செப் 3 2023) கல்யாணம். உறவுகளை திருப்தி பண்ண முடியவில்லை. ஒரு நல்ல மனிதர் குடோன் தெருவிற்கு புடவை வேஷ்டி வாங்க கூப்பிட்டு செல்வதாக சொல்லியிருந்தார். இடையே ஒரு நவக்கிரகம் தங்களை எதற்கும் கலந்து ஆலோசனை செய்வதில்லை என ஒரு கலக குரல் எழுப்பி ஆர்பாட்டம் செய்ததால் அவர்களை கூட்டி சென்றால் பிரச்சனை தீரும் என்று புடவை வாங்கியபின்னரும் இன்றுவரை தீரவில்லை, கொழுந்துவிட்டு எரிகிறது. கற்றுக்கொண்ட பாடம் யாதெனில், நாம் தான் கர்த்தா எனவே எல்லா கர்மங்களையும் நாம் நினைத்தபடியே செய்யவேண்டும், மனித வடிவ நவகிரகங்களை திருப்தி செய்யமுடியாது. ஒருவரின் நம்பிக்கை இழந்ததே மிச்சம். இன்னும் என்னவெல்லாம் நடக்க போகிறதோ. ஆண்டவா எல்லாருக்கும் நல்ல புத்தியைக்கொடு.

Saturday 8 July 2023

Trust

 You need to trust and believe in people otherwise life becomes impossible - Anton Chekhov ( Famous Russian writer).

Wednesday 21 June 2023

கண் திருஷ்டி

 இங்கு இரண்டு விஷயங்களின் மூலம் இதை எப்படி குறைப்பது என்று சொல்கிறேன்.

1. சிறுவயதில் பள்ளியில் படிக்கும்போது நான் படிக்கவே இல்லை என்பவர்கள் அதிக papper வாங்கி எழுதுவார்கள், அதுபோல் வெளியில் குடும்ப உறுப்பினர்கள் மகிழ்ச்சியாக இல்லாதது போல் நடித்துக்கொண்டு, வீட்டில் ஒரு நல்ல உடன்படிக்கை செய்துகொண்டு இருக்கவும். இப்படி சில குடும்பங்களில் நடக்கிறது அதனாலேயே எழுதுகிறேன்.

2. Body strong - basement week என்று ஒரு வடிவேல் காமெடி உள்ளது, இதற்கு உல்டாவாக நடந்துகொள்ளுங்கள். அதாவது வெளியில் நடியுங்கள் வீட்டில் சந்தோஷமாக இருங்கள்.


என்னைப் பொறுத்தமட்டில் கண் திருஷ்டியை avoid பண்ண முடியாது. பழுத்த மரம் கல்லடி படுவது போல இது எல்லார் மீதும் விழும். தான தர்மங்கள், பகவான் சரணாகதி ஸ்தோத்திரங்கள் என்று செய்து வந்தாலும்,  மேலே கூறியவாறும் இருக்கவும். "நீங்க எப்படி இருக்கீங்க, நான் சந்தோஷமா இருக்கேன்" என்று எங்கும் சொல்லவேண்டாம், உலகம் அதை விரும்புவதில்லை. கணவன், மனைவி, அப்பா, அம்மா, மாமனார்,மாமியாரிடம் ஒரு நல்ல பொழுதில் மகிழ்ச்சியாக இருக்கும்போது இதைப்பற்றி விவாதித்து ஒரு நல்ல agreement போட்டுகொள்ளவும். நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன், நீங்களும் அழுகிற மாதிரி அழுங்கள் என்று. வாழ்க வளமுடன்.

Monday 15 May 2023

Be firm

 "எல்லோருமே வாழ்க்கையில் ஏதாவது பிரச்சனை வந்தது என்றால் நம்முடைய வாழ்க்கை முடிந்து விட்டது என்று நினைக்க கூடாது. எப்படியும் கடைசி நேரத்தில் கூட நாம் உறுதியாக இருந்தால் அது மாற்றம் அடைந்து விடும்"

Saturday 13 May 2023

At Peace

 *மன அமைதி என்பது நம்மில் திருப்தியடைவதன் மூலமும், நம்மிடம் இருப்பதைக் குறித்து நன்றியுடன் இருப்பதன் மூலமும் கிடைக்கிறது என்பது தான் நிதர்சனமான உண்மையாகும்.*

Thursday 11 May 2023

Joint account study !!

 Who knows, it may work out in India also. American study says that people who spend from joint account are happy. Read this:

 https://www.eurekalert.org/news-releases/988250

Wedding(pre)

 இன்னும் 4 நாளில் ( செப் 3 2023) கல்யாணம். உறவுகளை திருப்தி பண்ண முடியவில்லை. ஒரு நல்ல மனிதர் குடோன் தெருவிற்கு புடவை வேஷ்டி வாங்க கூப்பிட்ட...